வழிபாடு
உஜ்ஜய்னி காளியம்மன்

காரைக்கால் ஆற்றங்கரை உஜ்ஜய்னி காளியம்மன் கோவில் உற்சவ பெருவிழா தொடக்கம்

Published On 2022-03-26 03:36 GMT   |   Update On 2022-03-26 03:36 GMT
காரைக்கால் கைலாச நாதர், நித்தியக் கல்யாணப் பெருமாள் கோவில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த உஜ்ஜய்னி காளியம்மன் கோவில், காரைக்கால் அரசலாற்றங் கரையில் உள்ளது.
காரைக்கால் கைலாச நாதர், நித்தியக் கல்யாணப் பெருமாள் கோவில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த உஜ்ஜய்னி காளியம்மன் கோவில், காரைக்கால் அரசலாற்றங் கரையில் உள்ளது. இந்தகோவிலில் ஆண்டு தோறும் உற்சவப் பெருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு விழாவிற்கான பந்தல்கால் முகூர்த்தம் நடைபெற்றது. விழாவில், கோவில் அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணைத் தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் கார்த்திக்கேயன், உறுப்பினர் பிரகாஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். வருகிற 29-ந் தேதி அம்பாள் வீதியுலா நிகழ்ச்சியும், முக்கிய நிகழ்ச்சியாக, 8-ந் தேதி அக்னி கப்பரை நிகழ்ச்சியும், 10-ந் தேதி விடையாற்றி உத்சவமும் நடைபெற வுள்ளது.
Tags:    

Similar News