செய்திகள்
கோப்புப்படம்

விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 547 பேருக்கு கொரோனா

Published On 2021-05-18 23:17 GMT   |   Update On 2021-05-18 23:17 GMT
மாவட்டத்தில் மேலும் 547 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 27,095 ஆக உயர்ந்து உள்ளது.
விருதுநகர்:

மாவட்டத்தில் மேலும் 547 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 27,095 ஆக உயர்ந்து உள்ளது.

22,926 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3,815 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் 7 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 294 ஆக உயர்ந்துள்ளது.

அரசு ஆஸ்பத்திரிகளில் 916 படுக்கைகள் உள்ள நிலையில் 775 படுக்கைகளில் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 121 படுக்கைகள் காலியாக உள்ளன.

சிகிச்சை மையங்களில் 1450 படுக்கைகள் உள்ள நிலையில் 666 படுக்கைகளில் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 684 படுக்கைகள் காலியாக உள்ளன. விருதுநகர் கணேஷ் நகர், ஆர்.வி.ஆர். நகர், அல்லம்பட்டி, அம்பேத்கர் தெரு, ஆர்.ஆர்.நகர், சேடப்பட்டி, ஆனைக்குழாய்தெரு, ரோசல்பட்டி உள் தெரு, ஆர்.எஸ்.நகர், மோகன் ராஜேஷ் காலனி, சத்திர ரெட்டியபட்டி, வள்ளியூர் வடமலைக்குறிச்சி, பெரிய பள்ளிவாசல் தெரு, கந்தபுரம்தெரு, லட்சுமி காலனி, பெரியவள்ளிகுளம், புல்லலக்கோட்டை ரோடு, கட்டையாபுரம், முத்தால்நகர், பேராசிரியர் காலனி, என்.ஜி.ஓ. காலனி, நீதிபதிகள் குடியிருப்பு, சூலக்கரைமேடு, செவல்பட்டி, பழைய ெரயில்வே காலனி உள்ளிட்ட பல பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் மல்லாங்கிணறு, நரிக்குடி, திருச்சுழி, சாத்தூர், மேட்டமலை, அருப்புக்கோட்டை, பரளச்சி, முத்தநேரி, இலந்தைகுளம், சிவகாசி, திருத்தங்கல், எம்.புதுப்பட்டி, வெம்பக்கோட்டை, பள்ளிமடம், மேலத்துலுக்கன்குளம், நடுவப்பட்டி, ராஜபாளையம், சேத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராமச்சந்திராபுரம், மம்சாபுரம், மகாராஜபுரம், சேத்தூர், காரியாபட்டி, பாலையம்பட்டி, பந்தல்குடி, பனைக்குடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News