ஆன்மிகம்
சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்ற காட்சி.

மாரியம்மன் கோவில் தீ மிதி திருவிழா: பக்தர்கள் இன்றி நடந்தது

Published On 2020-07-30 04:23 GMT   |   Update On 2020-07-30 04:23 GMT
சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையான முறையில் நடந்தது.
சிதம்பரம் கீழத்தெருவில் பிரசித்தி பெற்ற மாரியம்மன்கோவில் உள்ளது. இந்த கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் ஆடி மாத தீமிதி திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இது தவிர மாவிளக்கு ஏற்றியும் செடல் அணிந்தும் பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்துவது வழக்கம்.

இந்த ஆண்டு கொரோனா பரவுவதை தடுப்பதற்காக கோவில்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் விழா எளிய முறையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி கடந்த 17-ந்தேதி தீ மிதிதிருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை நடந்தது.

முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி திருவிழாவும் எளிமையான முறையில் பக்தர்கள் இன்றி நடந்தது. சமூக இடைவெளியை பின்பற்றி கோவில் நிர்வாகத்தினர், அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்றனர். அதில் சிலர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்கள் விடுபடவும், நல்வாழ்வு பெறவும் சிறப்பு பூஜை நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News