ஆட்டோமொபைல்
டோல் பிளாசா

இந்த வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம் - மத்திய அரசு திட்டம்

Published On 2020-11-09 11:05 GMT   |   Update On 2020-11-09 11:05 GMT
இந்தியாவில் குறிப்பிட்ட தேதியில் இருந்து இந்த வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.


இந்தியாவில் ஜனவரி 1, 2021 முதல் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. இதில் 2017, டிசம்பர் 1 அல்லது அதற்கு முன் விற்பனை செய்யப்பட்ட எம் மற்றும் என் பிரிவில் வரும் பழைய வாகனங்கள் அடங்கும்.

மோட்டார் வாகன சட்டம் 1989 படி 2017 டிசம்பர் மாதம் முதல் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பாஸ்டேக் பொருத்தப்படால் தான் நான்கு சக்கர வாகனத்திற்கான தகுதி சான்று வழங்கப்படும் என அந்த மத்திய அரசு அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.



நாடு முழுக்க பெரும்பாலான பகுதிகளில் பாஸ்டேக் மிக எளிமையாக கிடைக்க மத்திய அரசு வழிவகை செய்துள்ளது. இதுதவிர அடுத்த இரண்டு மாதங்களில் ஆன்லைனிலும் பாஸ்டேக் ஐடி பெற முடியும். 

இத்துடன் நாடு முழுக்க அனைத்து டோல்களிலும் எலெக்டிரானிக் பேமண்ட் முறையை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதன் மூலம் டோல்களில் காத்திருக்கும் நேரம் வெகுவாக குறையும் என கூறப்படுகிறது. 
Tags:    

Similar News