செய்திகள்
மீட்கப்பட்ட பணத்தை ராமநாதன் - தேன்மொழி தம்பதியிடம் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா வழங்கிய காட்சி.

கொள்ளையனிடம் இருந்து மீட்கப்பட்ட பணம் தம்பதியிடம் ஒப்படைப்பு - மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா வழங்கினார்

Published On 2021-09-15 08:39 GMT   |   Update On 2021-09-15 08:39 GMT
கேத்தம்பாளையம் அருகே செல்லும் போது அவர்களுக்கு பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் தேன்மொழி கையில் இருந்த பணப்பையை பறித்துக் கொண்டு தப்பி சென்றார்.
திருப்பூர்:

கேத்தம்பாளையம் அருகே செல்லும் போது அவர்களுக்கு பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் தேன்மொழி கையில் இருந்த பணப்பையை பறித்துக்கொண்டு தப்பி சென்றார். 

திருப்பூர் காங்கயம் ரோடு நல்லூரை அடுத்த முத்தனம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 45). சம்பவத்தன்று இவர் நிலத்தை பத்திர பதிவு செய்வதற்காக நெருப்பெரிச்சலில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு அவரது மனைவி தேன்மொழியுடன் (36) சென்றார். அப்போது ரூ.11 லட்சத்து 12 ஆயிரத்தை பையில் எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் இருவரும் சென்றனர்.

கேத்தம்பாளையம் அருகே செல்லும் போது அவர்களுக்கு பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் தேன்மொழி கையில் இருந்த பணப்பையை பறித்துக் கொண்டு தப்பி சென்றார். 

இதையடுத்து திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் ரவி, வடக்கு மாநகர உதவி போலீஸ் கமிஷனர் மகேந்திரன், அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் மற்றும் வடக்கு போலீஸ் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். கொள்ளையனை பிடிக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவுபடி தனிப்படையும் அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் கொள்ளையில் ஈடுபட்ட ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையம் அத்தாணி கள்ளிப்பட்டியை சேர்ந்த அருண்குமார் (25)  என்பவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.10லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். 

இந்தநிலையில் இன்று கொள்ளையனை பிடித்து பணத்தை மீட்ட தனிப்படையை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சென்னகேசவன், ஆனந்தன், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், தங்கவேல், சங்கரநாராயணன் மற்றும் முதல் நிலை காவலர்கள் ரமேஷ்குமார், ராஜசேகர், மயில்சாமி, தீபக், காவலர்கள் சபிக்ராஜா, மணிகண்டன், பிரபாகரன், குகன்நாதன், வினோத்குமார் ஆகியோரின் நற்பணியை பாராட்டி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார். 

மேலும் ராமநாதன் - தேன்மொழி தம்பதியிடம் பணத்தை ஒப்படைத்தார். அவர்கள் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.  
Tags:    

Similar News