செய்திகள்
ரகுவீர்

பப்ஜி விளையாடியதற்காக திட்டிய தந்தையை கொடூரமாக கொன்ற மகன் கைது

Published On 2019-09-10 06:57 GMT   |   Update On 2019-09-10 06:57 GMT
கர்நாடகா மாநிலத்தில் பப்ஜி விளையாடியதற்காக தந்தை தொடர்ந்து திட்டியதால், அவரை கொடூரமாக கொன்ற மகன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெலகாவி:

ஐரிஸ் நாட்டின் 'பிராடன் கிரீனி' என்பவரால் உருவாக்கப்பட்டது 'பப்ஜி' ஸ்மார்ட் போன் கேம். (Player Unknown's Battle grounds) என்பதே இதன் சுருக்கம். இந்த கேம் இளைஞர்கள், இளம் பெண்களின் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. இது அவர்களின் நேரத்தை வீணடித்து அந்த விளையாட்டிற்கு அடிமைகளாகவும் உருவாக்குகிறது.

இந்த கேமின் மோகம் இப்போது அதிகரித்து வருவதால்,  பல்வேறு விபரீதங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் பப்ஜியால் தன் தந்தையையே மகன் கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

பெலகாவியைச் சேர்ந்தவர் ரகுவீர்(21). டிப்ளோமோ படித்துவிட்டு வேலையின்றி இருந்தார். இவர் பப்ஜி கேமுக்கு அடிமையாகியுள்ளார். வேறு எதையும் கவனிக்காமல் இதனையே விளையாடியுள்ளார். இதனால் இவருக்கும், இவரது தந்தை சங்கரப்பாவுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.



சமீபத்தில், ரகுவீர் இரவு பகலாக பப்ஜி விளையாடியதை சங்கரப்பா கடுமையாக கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த ரகுவீர், சங்கரப்பாவை அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் தலையை துண்டித்துவிட்டு தப்பினார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சங்கரப்பாவின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ரகுவீரை விசாரிக்கையில், அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து ரகுவீர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags:    

Similar News