செய்திகள்
மு.க.ஸ்டாலின்- அன்பகம் கலை

திமுக துணை அமைப்பு செயலாளராக அன்பகம் கலை நியமனம்- துரைமுருகன்

Published On 2021-07-15 04:58 GMT   |   Update On 2021-07-15 04:58 GMT
ஆலந்தூர் தெற்கு பகுதி 166-வது வட்ட தி.மு.க. பொறுப்பாளராக உலக நாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை:

தி.மு.க. சட்டதிட்ட விதி 18, 19-ன்படி துணை அமைப்புச் செயலாளராக அன்பகம் கலை நியமிக்கப்படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், ஆலந்தூர் தெற்கு பகுதி 166-வது வட்டக் கழக செயலாளர் மு.வரதராஜன் மறைவெய்திய காரணத்தால், வட்டக்கழகப் பணிகள் செவ்வனே நடைபெற இ.உலக நாதன் 166-வது வட்டக் கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டக்கழக அமைப்பின் பிற நிர்வாகிகள் அவருடன் இணைந்து பணியாற்றுமாறு தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News