செய்திகள்
புதுவை கவர்னர் கிரண்பேடி

விநாயகர் சதுர்த்தி- கவர்னர் கிரண்பேடி வாழ்த்து

Published On 2020-08-22 08:56 GMT   |   Update On 2020-08-22 08:56 GMT
மக்கள் தங்கள் நலம் பொருட்டு வீட்டிலேயே சதுர்த்தி விழாவை பாதுகாப்பாக கொண்டாடி விநாயகரின் அருளை பெற வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

விநாயகர் சதுர்த்தி என்று அழைக்கப்படும் கணேஷ் சதுர்த்தி நாடு முழுவதும் பாரம்பரிய மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. விநாயகர் ஞானம், செழிப்பு மற்றும் நல்ல அதிஷ்டத்தின் கடவுளாக வணங்கப்படுகிறார். ஒவ்வொரு புதிய முயற்சியின் தொடக்கத்திலும் பாரம்பரியமாக முதல் கடவுளாக அழைக்கப்பட்டு வணங்கப்படுகிறார்.

இந்த கொண்டாட்டம் ஆண்டு முழுவதும் பொது நிகழ்வுகளில் பெரிய அளவிலான சிலைகளுடன் சமூக நிகழ்வில் முக்கிய இடத்தை வகிக்கிறது. நாம் தற்போது கொரோனா வைரஸ் சவாலை எதிர்கொண்டுள்ளோம். ஆகவே மக்கள் தங்கள் நலம் பொருட்டு வீட்டிலேயே சதுர்த்தி விழாவை பாதுகாப்பாக கொண்டாடி விநாயகரின் அருளை பெறுமாரும், பொதுக்கொண்டாட்டத்தை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News