ஆன்மிகம்
திருச்செங்கோடு அருகே குமரமங்கலம் பாண்டீஸ்வரர் கோவிலில் 508 நெய் தீபம் ஏற்றி வழிபாடு

திருச்செங்கோடு அருகே குமரமங்கலம் பாண்டீஸ்வரர் கோவிலில் 508 நெய் தீபம் ஏற்றி வழிபாடு

Published On 2020-12-21 05:56 GMT   |   Update On 2020-12-21 05:56 GMT
திருச்செங்கோடு அருகே உள்ள குமரமங்கலத்தில் பழமையான பங்கஜவல்லி சமேத பாண்டீஸ்வரர் கோவிலில் 508 நெய் தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
திருச்செங்கோடு அருகே உள்ள குமரமங்கலத்தில் பழமையான பங்கஜவல்லி சமேத பாண்டீஸ்வரர் கோவில் உள்ளது. அர்த்தநாரீஸ்வரர் கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட இந்த கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி, திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவை சார்பில் 508 நெய் தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் குமரவேல் முன்னிலை வகித்தார். அம்பாள் சன்னதி வாசலில் சிவலிங்க வடிவில் வண்ணக்கோலம் இடப்பட்டு நெய் தீபங்கள் ஏற்றப்பட்டது. கோவிலுக்கு எதிரே உள்ள தெப்பக்குளத்தின் படிக்கட்டுகளில் தீபங்கள் ஏற்றப்பட்டது.

கொேரானா தொற்று முற்றிலும் நீங்கவும், மழை வேண்டியும் கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சியும் நடந்தது. கங்கை, காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட புனித நதிகளின் தீர்த்தம் நிரம்பிய புனித கலசங்கள் வைக்கப்பட்டு அதற்கு பெண்கள் மலர்தூவி வழிபாடு நடத்தினர். பின்னர் புனித கலசதீர்த்தம் தெப்பக்குளத்தில் சேர்க்கப்பட்டது. பூஜையில் ருக்மணி அம்மாள், ராதா, லலிதா, ஆசிரியை வஜ்ரவேல், சங்கர், பாலாஜி, சண்முகசுந்தரம், ஸ்ரீநிதி, பழனிச்சாமி, ஸ்ரீ ஹரி உள்ளிட்ட தேசிய சிந்தனை பேரவை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News