செய்திகள்
பிடிபட்ட குரங்குகள்

அட்டகாசம் செய்த 35 குரங்குகள் கூண்டில் சிக்கின

Published On 2020-09-15 09:52 GMT   |   Update On 2020-09-15 09:52 GMT
ஆரல்வாய்மொழி பகுதியில் அட்டகாசம் செய்த 35 குரங்குகள் கூண்டில் சிக்கின. இவை அனைத்தும் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டன.
ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட்டில் குரங்குகள் அட்டகாசம் செய்து வந்தன. அருகில் உள்ள மலையில் இருந்து கூட்டம், கூட்டமாக வரும் குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை எடுத்து செல்வதோடு பெண்கள், குழந்தைகளை அச்சுறுத்துகிறது. அதாவது, ஆலயத்திற்கு வருபவர்களின் பொருட்களை பிடுங்கி செல்கிறது. இந்த அட்டகாசத்தை தடுக்கவும், குரங்குகளை பிடிக்கவும் வனத்துறையிடம் தேவசகாயம் மவுண்ட் பங்கு பேரவை தலைவர் மிக்கேல், செயலாளர் தேவசகாய மைக்கிள்ராஜ் ஆகியோர் மனு அளித்தனர்.

இதனையடுத்து வன ஊழியர் துரைராஜ் குரங்குகளை பிடிக்க அந்த பகுதியில் கூண்டுகள் வைத்தார். அதில், முட்டை மற்றும் பழங்கள் உண்ணப்பட்டன. பழங்களை உண்ண வந்த 35 குரங்குகள் கூண்டில் சிக்கின. இவை அனைத்தும் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டன.
Tags:    

Similar News