செய்திகள்
புதுவை சடட்சபை

மேகதாது அணைக்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

Published On 2021-08-30 11:15 GMT   |   Update On 2021-08-30 11:15 GMT
சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி தீர்மானத்தை முன்மொழிந்து பேசியபோது, மேகதாதுவில் அணை கட்டினால் காரைக்காலுக்கு வரவேண்டிய 7 டிஎம்சி நீர் வராது என்றார்.
புதுச்சேரி:

புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டதொடர் கடந்த 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. துணைநிலை ஆளுநரின் தமிழ் உரையுடன் தொடங்கிய இந்த பட்ஜெட் கூட்டதொடர், முதல்வர் தாக்கல் செய்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துடன் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

முதல்வர் ரங்கசாமி தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். அப்போது, மேகதாதுவில் அணை கட்டினால் காரைக்காலுக்கு வரவேண்டிய 7 டிஎம்சி நீர் வராது என்றும், மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றும் ரங்கசாமி தெரிவித்தார். 

இதேபோல் மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தமிழக அரசும் சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
Tags:    

Similar News