செய்திகள்
போரிஸ் ஜான்சன்

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு - ஊரடங்கை நீட்டிக்க இங்கிலாந்து பரிசீலனை

Published On 2021-06-13 01:00 GMT   |   Update On 2021-06-13 01:00 GMT
இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் 8,125 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது பிப்ரவரி மாதத்துக்கு பின் அங்கு பதிவான அதிகபட்ச தினசரி பாதிப்பாகும்.
லண்டன்:

இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் டெல்டா மாறுபாடு, தற்போது ஐரோப்பா முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக இங்கிலாந்தில் இந்த புதிய வகை கொரோனா வைரசின் பாதிப்பு அதிகமாக உள்ளது.

இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் 8,125 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இது பிப்ரவரி மாதத்துக்கு பின் அங்கு பதிவான அதிகபட்ச தினசரி பாதிப்பாகும். இந்த புதிய பாதிப்புகளில் 90 சதவீதம் டெல்டா மாறுபாடு வைரஸ் என இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சகம் கூறுகிறது.

இதனிடையே இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற 21-ந் தேதி முடிவுக்கு வரும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கனவே அறிவித்துள்ளார். ஆனால் டெல்டா மாறுபாடு வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வருவதை தாமதப்படுத்த வேண்டும் என சுகாதார நிபுணர்கள் அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்தநிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்க இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News