உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த காங்கிரஸ் நிர்வாகிகள்.

மோடி குறித்து அவதூறு தகவல் பரப்புவதாக காங்கிரஸ் நிர்வாகிகள் மனு

Published On 2022-01-11 07:36 GMT   |   Update On 2022-01-11 07:36 GMT
மோடி பஞ்சாப் பயணம் குறித்து அவதூறு தகவல் பரப்புவதாக கலெக்டரிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் மனு அளித்தனர்.
திருவண்ணாமலை:

பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணம் குறித்து அவதூறு தகவல்களை பரப்பி அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில காங்கிரஸ் அரசை கலைப்பதற்கான முயற்சியில் மத்திய பா.ஜ.க அரசு ஈடுபடுவதை கண்டித்தும், உண்மை நிலையை உணர்த்தும் வகையிலும் கவர்னருக்கு அனுப்ப கோரும் மனு மாவட்ட கலெக்டரிடம் காங்கிரஸ் கட்சியினர் வழங்குவார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி அறிவித்து இருந்தார். 

இதைத்தொடர்ந்து நேற்று திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.பி.அண்ணாமலை, திருவண்ணாமலை நகரத் தலைவர் வெற்றி செல்வன் ஆகியோர் தலைமையில் திருவண்ணா மலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் மனுவை புகார் பெட்டியில் செலுத்துமாறு தெரிவித்தனர்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் கலெக்டர் நேரில் சந்தித்து பிரதமர் மோடியின் பயணம் குறித்து அவதூறு தகவலை காங்கிரஸ் கட்சி மீது பரப்புவதை நிறுத்திக்கொண்டு மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த கோரி கவர்னருக்கு, கலெக்டர் மூலமாக மனு அளிக்க செல்வதாக தெரிவித்தனர். 

இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.
Tags:    

Similar News