தொழில்நுட்பச் செய்திகள்
என்.எஃப்.டி

இன்ஸ்டாகிராமிற்கு வரவுள்ள டிஜிட்டல் சொத்துக்கள்... மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்ட அறிவிப்பு

Published On 2022-03-16 07:24 GMT   |   Update On 2022-03-16 07:24 GMT
மெட்டாவெர்ஸில் இயங்குபவர்கள் என்.எஃப்.டியில் தங்களுக்கு பிடித்த டிஜிட்டல் உடை, தோற்றத்தை வாங்கிக்கொள்ளலாம் என மார்க் ஜுக்கர்பெர்க் கூறியுள்ளார்.
இன்று உலகம் முழுவதும் அதிகம் பேசப்படும் பொருளாக என்.எஃப்.டி இருக்கிறது.

என்.எஃப்.டி எனப்படும் “நான் ஃபங்கியபில் டோக்கன்” ஒரு வகை டிஜிட்டல் டோக்கன் ஆகும். நிஜ உலக சொத்துக்கள் அல்லது டிஜிட்டல் கலைப்படைப்புகளுக்கு டிஜிட்டல் சான்றிதழ்களை உருவாக்கி, அவற்றை விற்பதற்கு என்.எஃப்.டி டோக்கன்கள் உதவுகின்றன.

இந்த என்.எஃப்.டியை விரைவில் இன்ஸ்டாகிராமிற்கு கொண்டு வருவதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுயதாவது:-

 இன்னும் சில மாதங்களில் என்.எஃப்.டி இன்ஸ்டாகிராமிற்கு கொண்டு வரப்படும். அதை வாங்குவதற்கும் விற்பதற்கும் கிரிப்டோ வேலட்டும் இன்ஸ்டாகிராமில் இடம்பெறும். மெட்டாவெர்ஸில் இயங்குபவர்கள் என்.எஃப்.டியில் தங்களுக்கு பிடித்த டிஜிட்டல் உடை, தோற்றத்தை வாங்கிக்கொள்ளலாம்.

இவ்வாறு மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News