லைஃப்ஸ்டைல்
உடற்பயிற்சி

நீங்கள் நாள் தவறாமல் உடற்பயிற்சி செய்பவரா? இதோ உங்களுக்கான ஆலோசனை

Published On 2021-02-26 02:20 GMT   |   Update On 2021-02-26 02:20 GMT
உடலை வலுவாக்க உடற்பயிற்சி மேற்கொண்டால் மட்டும் போதாது. அதற்கு பின்னர் என்ன செய்ய வேண்டும் என்றும் தெரிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
உடலை வலுவாக்க உடற்பயிற்சி மேற்கொண்டால் மட்டும் போதாது. அதற்கு பின்னர் என்ன செய்ய வேண்டும் என்றும் தெரிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

உடற்பயிற்சி செய்து முடித்த பின்னர், உடலை ரிலாக்ஸ் அடையச் செய்யும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்து முடித்து விட்டீர்கள். உடனே அந்த உடைகளை மாற்ற வேண்டும். காரணம் உடற்பயிற்சியின் போது அதிகமாக வியர்த்ததால், உடையில் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் குடிப் புகுந்திருக்கும்.

சிலர் உடற்பயிற்சி செய்து முடித்த பின்னர், குளித்துவிட வேண்டும். வெறும் உடையை மட்டும் மாற்றினால், சருமத்தில் வியர்வை படலம் ஏற்பட்டு, பாக்டீரியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறோம் என்று அர்த்தம்.

உடற்பயிற்சிக்கு பின் போதிய அளவில் சிலர் தண்ணீர் குடிக்கமாட்டார்கள். இப்படி தண்ணீர் குடிக்காமல் இருந்தால், உடற்பயிற்சியின் போது கடுமையான காயங்களைக் கண்ட உடல் தசைகள் ரிலாக்ஸ் ஆகாது. நன்கு உடற்பயிற்சி செய்து, அன்றைய நாள் சரியான அளவில் தூங்காமல் இருந்தால், உடலுக்கு வேண்டிய ஆற்றலானது கிடைக்காமல் போகும்.

மேலும் அனைவருக்குமே தெரியும், தூக்கத்தை மேற்கொண்டால் தான், உடற்பயிற்சியின் போது பாதிப்படைந்த தசைத் திசுக்கள் அனைத்தும் புத்துயிர் பெறும். எனவே இதையும் முறையாக பின்பற்றினால் உடற்பயிற்சி செய்ததற்காக முழு பலனையும் அடையலாம்.
Tags:    

Similar News