செய்திகள்
கோப்பு படம்.

தருமபுரி மாவட்டத்தில் டாக்டர் உள்பட 39 பேருக்கு கொரோனா தொற்று- மேலும் ஒருவர் பலி

Published On 2020-09-14 08:33 GMT   |   Update On 2020-09-14 08:33 GMT
தருமபுரி மாவட்டத்தில் டாக்டர் உள்பட 39 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தருமபுரி:

தருமபுரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று தருமபுரி குப்பூர் காமராஜர் நகர் பகுதியில் 37 வயது பெண், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். மேலும் செட்டிக்கரை காமராஜ் நகரில் 38 வயது பெண், தருமபுரி சத்திரம் மேலத்தெரு சந்துவீதி 37 வயது வங்கி ஊழியர், தருமபுரி ராமலிங்க தெரு 27 வயது வாலிபர், தருமபுரி மாரியம்மன் கோவில் தெரு 29 வயது வாலிபர், கடகத்தூரில் 14 வயது சிறுவன், பாப்பி ரெட்டிப் பட்டியில் 32 வயது டாக்டர், 78 வயது முதியவர்,

பாப்பிரெட்டிப்பட்டி ஆலபுரம் நடூர் 65 முதியவர், 11 வயது சிறுவன், மூப்பனார் கோவில் தெரு 43 வயது ஆண், பில்பருத்தி குப்பனூர் 44 வயது பஸ் டிரைவர், பாப்பிரெட்டிப்பட்டி பிள்ளையார்கோவில் தெரு 19 வயது வாலிபர், அரூர் அம்பேத்கார் நகர் 45 வயது போலீஸ் ஏட்டு, மொரப்பூர் கோபிசெட்டிப்பாளையம் அல்லல்பட்டி 29 வயது உதவி பேராசிரியர் உள்ளிட்ட 39 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் அனைவரும் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 2029 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 697 பேர் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 1312 பேர் நோய் குணமாகி வீடு திரும்பி விட்டனர். நேற்று ஒரேநாளில் மட்டும் 20 பேர் குணமாகி வீட்டுக்கு சென்றனர்.

தருமபுரியில் நேற்று கொரோனா தொற்று பாதித்த ஒருவர் உயிரிழந்தார். இதுவரை கொரோனா பாதித்து பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News