உள்ளூர் செய்திகள்
பலத்த காற்றால் கீழே விழுந்து சேதமான மின்கம்பம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றில் 300 மின்கம்பங்கள் சேதம்

Published On 2022-05-05 07:24 GMT   |   Update On 2022-05-05 07:24 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றில் 300 மின்கம்பங்கள் சேதமானது.
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், அவ்வப்போது  மின்வெட்டால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். 
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக சூறாவளி காற்றுடன் பெய்யும் மழையால் பல பகுதிகளில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி நகர் உட்பட பல இடங்களில், 4 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாததால், பல பகுதிகள் இருளில் மூழ்கின.  

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறும போது, கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக பராமரிப்பிற்காக மின்நிறுத்தம் செய்யப்படவில்லை. மேலும் 
கடந்த இரு தினங்களாக அடித்த சூறாவளி காற்றினால் கிருஷ்ணகிரி நகரில் மட்டும் 50க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து உள்ளன. 

மேலும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மரங்கள் சாய்ந்து உள்ளன என ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மின் கம்பிகளில் உள்ள இன்சுலேட்டர், வெடித்து விடுவதால் அதையும் ஆராய்ந்து மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

மாவட்டம் முழுவதும் சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு இதுவரை 300 க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமாகி உள்ளது. இவை அனைத்து மாற்றிமைக்கப்பட்டு, தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர். 
Tags:    

Similar News