ஆன்மிகம்
எலவனூர் பாலதண்டாயுதபாணி கோவிலில் சோமவார விழா

எலவனூர் பாலதண்டாயுதபாணி கோவிலில் சோமவார விழா

Published On 2021-04-07 02:38 GMT   |   Update On 2021-04-07 02:38 GMT
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே எலவனூரில் பழமையான பாலதண்டாயுதபாணி கோவிலில் பங்குனி சோம வார விழா நடைபெற்றது. விழாவையொட்டி அன்னதானம் நடைபெற்றது.
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே எலவனூரில் பழமையான பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி சோம வார விழா நடைபெற்றது. இதனையொட்டி நேற்று முன்தினம் காலை வேன் மூலம் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வரப்பட்டு பாலதண்டாயுத சாமிக்கு காவிரி நீரை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு அலங்காரம் செய்து அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு எடுத்துச் சென்று அங்கும் சிறப்பு பூஜை நடந்தது.

அதன்பிறகு அங்கிருந்து மாரியம்மன் கோவில், பெருமாள் கோவில், காமாட்சி அம்மன் கோவில் ஆகிய கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி அன்னதானம் நடைபெற்றது.
Tags:    

Similar News