செய்திகள்
ரஜினிகாந்த்

டெல்லி எல்லைகள் மூடல், தமிழகத்தில் கூடுதல் தளர்வு, ரஜினிகாந்த் ஆலோசனை உள்ளிட்ட முக்கிய செய்திகள்

Published On 2020-11-30 08:27 GMT   |   Update On 2020-11-30 08:27 GMT
விவசாயிகளின் போராட்டம் காரணமாக டெல்லி எல்லைகள் மூடல், தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு, மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்ப்போம்.

# வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் 5வது நாளாக நீடிக்கிறது. தொடர் போராட்டம் காரணமாக டெல்லியின் இரண்டு எல்லைகள் மூடப்பட்டு, வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

# மத்திய அரசு விவசாயிகளை பயங்கரவாதிகள் போல நடத்துவதாக சிவசேனாவின் சஞ்சய் ராவத் எம்.பி. குற்றம்சாட்டி உள்ளார்.

# இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 94 லட்சத்தை கடந்துள்ளது. புதிய பாதிப்பு சற்று குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 38,772 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 88.47 லட்சம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 4.46 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

# ராஜஸ்தான் மாநில பாஜக எம்எல்ஏ கிரண் மகேஷ்வரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

# தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் டிசம்பர் 31 வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. கல்லூரிகள், பல்கலைக்கழங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிசம்பர் 7ந்தேதி முதல் தொடங்குகிறது. டிசம்பர் 14ந்தேதி முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்படும். 

# நடிகர் ரஜினிகாந்த, அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக மக்கன் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது, அரசியல் கள நிலவரம் தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் தங்கள் கருத்துக்களை ரஜினியிடம் தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், விரைவில் முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.

# ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்துமாறு அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

# தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாயப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

# அமெரிக்க அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன், தனது வீட்டில் செல்லப்பிராணியான நாயுடன் விளையாடியபோது அவரது கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டது. அவர் விரைவில் குணமடைய அதிபர் டிரம்ப் வாழ்த்து தெரிவித்தார்.

# இலங்கை மகாரா சிறையில் இன்று பயங்கர கலவரம் ஏற்பட்டது. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 கைதிகள் உயிரிழந்தனர்.

# இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள், டி 20 தொடரில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் விலகியுள்ளார். 2வது ஒருநாள் போட்டியின் போது காயம் அடைந்ததால் விலகுவதாக வார்னர் அறிவித்துள்ளார். 

# 7 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்ற சென்னை கார் பந்தய வீரர் ரூ.4 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.
Tags:    

Similar News