செய்திகள்
கோப்புபடம்

25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

Published On 2021-06-09 13:34 GMT   |   Update On 2021-06-09 13:34 GMT
தமிழகத்தில் 25 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே பல்வேறு துறைகளின் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு, பலருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 25 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவில், மதுரை மாநகராட்சி கமிஷனராக கே.பி.கார்த்திகேயனும், சேலம் மாநகராட்சி கமிஷனராக கிறிஸ்துராஜூம், திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனராக விஷ்ணு சந்திரனும், கோவை மாநகராட்சி கமிஷனராக ராஜகோபால் சுங்கராவும், திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக கிராந்திகுமாரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும், சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்(பணிகள்) ஆக பிரசாந்த்தும், சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்(சுகாதாரம்) ஆக- நர்னவாரே மணிஷ் சங்கராவும், சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்(கல்வி) ஆக - டி.சினேகாவும் நியமிக்கப்படுகின்றனர் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

இவர்கள் தவிர கடலூர், கூடுதல் கலெக்டர், திட்ட அலுவலராக பவன்குமாரும், கடலூர் கூடுதல் கலெக்டர்(வருவாய்) ஆக ரஞ்சித் சிங்கும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை கூடுதல் இயக்குநராக சரவணனும், தஞ்சாவூர் கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) திட்ட அலுவலராக ஸ்ரீகாந்தும், தர்மபுரி கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) மாவட்ட ஊரக வளர்ச்சி அமைப்பின் திட்ட அலுவலராக வைத்தியநாதனும், திருவண்ணாமலை கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) ஆக தபிரதாப்பும், திண்டுக்கல் மாவட்ட கூடுதல் கலெக்டராக (வளர்ச்சி) தினேஷ் குமாரும், தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கலெக்டராக சரவணனும், தமிழக அரசின் துணை செயலராக அனுவும், சேலம் கூடுதல் கலெக்டராக(வளர்ச்சி) சேக் அப்துல் ரஹ்மானும், ஈரோடு மாவட்ட கூடுதல் கலெக்டராக (வளர்ச்சி) பிரதிக் தயாளும், தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் கலெக்டராக (வளர்ச்சி) சுகபுத்ராவும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கூடுதல் இயக்குநராக இளம்பாஹாவத்தும், சென்னை மாநகராட்சி தெற்கு பிராந்திய துணை கமிஷனராக சிம்ரன்ஜித்சிங்கும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News