செய்திகள்
நடிகை சஞ்சனா கல்ராணி

நடிகை சஞ்சனா ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

Published On 2020-10-22 01:50 GMT   |   Update On 2020-10-22 01:50 GMT
நடிகை சஞ்சனா ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த விசாரணையின் போது அரசு தரப்பில் வக்கீல், ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சேபனை தெரிவிக்க உள்ளார்.
பெங்களூரு :

கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணியை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களின் ஜாமீன் மனுக்களை ஏற்கனவே பெங்களூரு சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. இதையடுத்து, நடிகை சஞ்சனா சார்பில் ஜாமீன் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி சீனிவாஸ் ஹரீஷ்குமார் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடந்த விசாரணையின் போது சஞ்சனாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று, அவரது வக்கீல் வாதாடி இருந்தார். அதே நேரத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல், சஞ்சனாவின் ஜாமீன் மனு மீது ஆட்சேபனை தெரிவிக்க காலஅவகாசம் கேட்டு இருந்தார்.

இதையடுத்து, 22-ந் தேதி (அதாவது இன்று) ஆட்சேபனை தெரிவிக்க நீதிபதி அவகாசம் வழங்கி இருந்தார். அதன்படி, நடிகை சஞ்சனா ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த விசாரணையின் போது அரசு தரப்பில் வக்கீல், ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சேபனை தெரிவிக்க உள்ளார். இதனால் இன்று நடைபெறும் விசாரணையின் போதும் நடிகை சஞ்சனாவுக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
Tags:    

Similar News