செய்திகள்
திருப்பதி கோவில்

திருப்பதி கொரோனா கட்டுப்பாட்டில் வந்த பிறகு இலசவ தரிசன டிக்கெட்- தேவஸ்தானம் தகவல்

Published On 2020-09-13 06:01 GMT   |   Update On 2020-09-13 06:01 GMT
திருப்பதியில் கொரோனா கட்டுப்பாடுக்குள் வந்த பிறகு மீண்டும் இலவச டிக்கெட் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி:

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதியில் உள்ள கவுண்டர்கள் மூலம் தினமும் 3 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட் வழங்க தேவஸ்தானம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது.

புரட்டாசி மாதம் தொடங்க உள்ளதால் இலவச தரிசன டிக்கெட் வாங்க தமிழகத்திலிருந்து 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பக்தர்கள் வரை தினமும் வருகின்றனர்.

மேலும் ரத்து செய்யப்பட்ட ரூ.3 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டிற்கு பதிவாக ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. இலவச தரிசனத்தில் பக்தர்களை அனுமதிக்க கூடாது என்று தேவஸ்தானத்திற்கு எண்ணமில்லை.

ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்றவர்களும் இலவச தரிசனத்தில் எவ்வாறு சாமி தரிசனம் செய்கிறார்களோ? அதே போல் தான் அவர்களும் தற்போது தரிசனம் செய்து வருகின்றனர்.

திருப்பதியில் கொரோனா கட்டுப்பாடுக்குள் வந்த பிறகு மீண்டும் இலவச டிக்கெட் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News