செய்திகள்
மினிமாரத்தான் போட்டியை கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்த காட்சி

1,500 மாணவ-மாணவிகள் பங்கேற்ற மினிமாரத்தான்: கனிமொழி - கீதாஜீவன் தொடங்கி வைத்தனர்

Published On 2021-10-09 10:29 GMT   |   Update On 2021-10-09 10:29 GMT
கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

தூத்துக்குடி:

வ.உ. சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் மினி மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது.

போட்டியில் தூத்துக்குடி, நெல்லை, சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 1,500 மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.

9 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டி வ.உ.சி. கல்லூரி முன்பாக இருந்து தொடங்கி யது.‌

போட்டியை கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து போட்டியில் பங்குபெற்ற மாணவ -மாணவிகள் தங்கள் இலக்கை நோக்கி ஓடத் தொடங்கினர். போட்டியில் மாணவர்கள் பிரிவில் வீரவநல்லூர் உடற்கல்வி மாணவர் பசுபதி முதலிடம் பிடித்தார்.

2-வது இடத்தை சென்னை லயோலா கல்லூரியை சேர்ந்த அஜித் என்ற மாணவரும், 3-வது இடத்தை பாளை கல்லூரி மாணவர் நவீனும் பிடித்தனர்.

இதுபோல் மாணவிகள் பிரிவில் ஆலங்குளம் கிராம கமிட்டி மேல்நிலைப்பள்ளி மாணவி ஐஸ்வர்யா முதலிடத்தை பிடித்தார்.

விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ராதிகா 2-வது இடத்தையும், நாகலாபுரம் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவி கோகிலா 3-வது இடத்தையும் பிடித்தனர்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் வ .உ. சி. கல்லூரி செயலாளர் சொக்கலிங்கம், கல்லூரி முதல்வர் வீரபாகு, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News