உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

திருப்பூரில் சேவல் சண்டை நடத்திய 15 பேர் கைது - ரூ.2 லட்சம் பணம், 5 கார்கள் பறிமுதல்

Published On 2022-01-15 07:38 GMT   |   Update On 2022-01-15 07:38 GMT
10 சேவல்கள், ரூ 2லட்சத்து 8 ஆயிரம் பணம் மற்றும் 5 நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி சட்டவிரோதமாக சேவல் சண்டை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய்க்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர் போலீசாருக்கு சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். 

இந்த உத்தரவை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது  மூலனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குருணைக்கள்பட்டி பாறைக்குழி பகுதியில் சட்டவிரோதமாக சேவல் சண்டையில் ஈடுபட்ட 10 பேரை மூலனூர் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 10  சேவல்கள், ரூ,2 லட்சத்து 8 ஆயிரம் பணம் மற்றும் 5 நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் ஊத்துக்குளி பகுதியில் இரண்டு பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ 2 ஆயிரத்து 900 பறிமுதல் செய்தனர். அதேபோல் தாராபுரம் பகுதியில் சேவல் சண்டையில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.4 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News