உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

மக்களுடன் மேயர் திட்டம் மூலம் அனைத்து வார்டு மக்களின் குறைகளை கேட்டறிய முடிவு

Published On 2022-04-17 06:17 GMT   |   Update On 2022-04-17 06:17 GMT
அனைத்து வார்டிலும் காலை 5:30மணி முதல் 8.30 மணி வரை 3 மணி நேரம் என்ற நேர அளவில் இந்த பணி மேற்கொள்ளப்படும்.
திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த பட்ஜெட் உரையின் போது ‘மக்களுடன் மேயர்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என மேயர் தினேஷ்குமார் அறிவித்தார்.

இதுகுறித்து மேயர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளில் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், அடிப்படை வசதி மேம்பாடு என தினமும் பார்வையிட்டு பணியாற்றி வருகின்றனர்.

இதுதவிர பகுதி வாரியாக குடிநீர் வினியோகம், வளர்ச்சி பணிகள் என பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுபோல் பணியாற்றும் அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தி உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இது மட்டுமின்றி மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், குடிநீர் சப்ளை ஆகியன குறித்தும் பகுதிவாரியாக ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து பகுதியிலும் மேயர் என்ற நிலையில் நேரடியாக மக்களை சந்தித்து அடிப்படை வசதி தேவைகள், குடியிருப்புகளில் நிலவும் பிரச்சினை, வளர்ச்சிப்பணிகள் நிலவரம் ஆகியன குறித்து கருத்து கேட்கும் வகையில் ‘மக்களுடன் மேயர்’ என்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

அனைத்து வார்டிலும் காலை 5:30மணி முதல் 8:30 மணி வரை 3 மணி நேரம் என்ற நேர அளவில் இது மேற்கொள்ளப்படும். பெரும்பாலும் பணிக்கு செல்லும் மக்கள் என்பதால் வேலை நேரத்துக்கு முன்பாக சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மக்களின் தேவை மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை குறித்து கேட்டறிந்து, அவற்றை சரி செய்வதற்கான சாத்திய கூறுகள் உடனுக்குடன் ஆராய்ந்து தீர்வு காணப்படும். 

இத்திட்டம் வரும் வாரம் முதல் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து வார்டுகளிலும் மக்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பும், தேவைகள் குறித்து அறிந்து தீர்வு காணவும் ஏதுவாக இது அமையும். 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News