உலகம்
போப் பிரான்சிஸ்

ஓரினச் சேர்க்கையாளராக இருக்கும் குழந்தைகளை ஆதரியுங்கள்: பெற்றோர்களுக்கு போப் பிரான்சிஸ் கோரிக்கை

Published On 2022-01-26 20:54 GMT   |   Update On 2022-01-26 23:04 GMT
ஒரே பாலின திருமணத்தை கிருஸ்தவ திருச்சபை ஏற்றுக்கொள்ளாது என்றாலும், ஓரின சேர்க்கையாளர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு உரிமை வழங்கும் சட்டங்களை ஆதரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வாடிகன் : 

வாடிக்கன் நகரில் வாராந்திர பார்வையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய போப் பிரான்சிஸ்,  குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பற்றி எடுத்துரைத்தார். பெற்ற பிள்ளை ஓரின சேர்க்கையாளராக இருந்தால் பெற்றோர்கள் அதை கண்டிக்காமல் ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  

தங்கள் குழந்தைகளின் வெவ்வேறு பாலியல் விருப்பங்களை காணும் பெற்றோர்களுக்கு அதை கையாளுவது என்பது சிக்கலானது என்றாலும் அதை மறைக்கும் மனப்பான்மையுடன் செயல்பட கூடாது என்றார். 

ஓரினச் சேர்க்கையாளர்களை அவர்களது குடும்பங்கள் குழந்தைகளாகவும் உடன்பிறந்த சகோதரிகளாகவும் ஏற்றுக்கொள்ள உரிமை உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஒரே பாலின திருமணத்தை  கிறிஸ்தவ திருச்சபை ஏற்றுக்கொள்ளாது என்றாலும், சுகாதாரப் பாதுகாப்பு உள்பட பிரச்சினைகளில் ஓரின சேர்க்கையாளர்களுக்கு உரிமை வழங்கும் சிவில் யூனியன் சட்டங்களை ஆதரிக்க முடியும் என்றும் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News