ஆன்மிகம்
நாதன் கோவில்

கும்பகோணம் அருகே நாதன் கோவிலில் பாலாலயம்

Published On 2021-10-26 04:25 GMT   |   Update On 2021-10-26 04:25 GMT
நந்திபுர விண்ணகரம் எனும் நாதன் கோவிலில் நேற்று பாலாலயம் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
108 வைணவ திவ்ய தேசங்களில் சோழநாட்டு திருப்பதிகளில் ஒன்றாக அழைக்கப்படுவது நந்திபுர விண்ணகரம் எனும் நாதன்கோவில் தலமாகும். இங்கு செண்பகவல்லி சமேதராக அருள்பாலிக்கும் ஜெகந்நாத பெருமாளை பிரம்மன், மார்க்கண்டேயர், சிபி சக்கரவர்த்தி ஆகியோர் வழிபட்டதாக தலவரலாறு கூறுகிறது.

 நந்திக்கு சாபவிமோசனம் கிடைத்த தலமாகும். இங்கு மகாலட்சுமி பிராத்தனை செய்து 8 அஷ்டமி விரதம் இருந்து, 8-வது அஷ்டமியில் திருமாலின் திருமார்பில் இணைந்ததாக ஐதீகம். பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற உள்ளன.

இதையொட்டி கோவிலில் நேற்று பாலாலயம் விழா நடைபெற்றது. அப்போது யாக சாலை பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News