செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

நிவர் புயலின் போது எடுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ

Published On 2020-11-27 05:21 GMT   |   Update On 2020-11-27 05:21 GMT
நிவர் புயலின் போது சென்னை அருகில் எடுக்கப்பட்டதாக கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக மாறி கரையை கடந்தது. நிவர் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. நீர் நிலைகள் நிரம்பி, பல பகுதிகளில் உபரி நீர் திறந்து விடப்பட்டன. 

இந்நிலையில், புயல் காற்றில் விளம்பர பதாகை அடித்து செல்லப்பட்டதால் மோட்டார்சைக்கிள் பயணிகள் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சென்னையின் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் எடுக்கப்பட்டது என்றும் இவை நிவர் புயலின் கோர காட்சிகள் என கூறி பகிரப்பட்டு வருகிறது.



வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. மேலும் இந்த வீடியோ ஆகஸ்ட் மாதத்தில் எடுக்கப்பட்டது ஆகும். முன்னதாக இதே வீடியோ ஐதராபாத்தில் எடுக்கப்பட்டதாக கூறி வைரலானது.

அந்த வகையில் வைரல் வீடியோ நிவர் புயலின் போது சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News