உள்ளூர் செய்திகள்
தஞ்சையில் நடந்த கூட்டத்தில் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் பேசினார்.

இருமொழி கொள்கை என்பது மக்களை ஏமாற்றுகின்ற கொள்கை - கரு.நாகராஜன்

Published On 2022-04-16 10:21 GMT   |   Update On 2022-04-16 10:21 GMT
இருமொழி கொள்கை என்பது தமிழக மக்களை ஏமாற்றுகின்ற கொள்கை என தஞ்சையில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் பேட்டியளித்துள்ளார்.




தஞ்சாவூர்:

பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் இன்று தஞ்சையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது.

வருகிற 20-ந் தேதி வரை பா.ஜ.க. சார்பில் இந்தியா முழுவதும் சமூக நல்லிணக்கத்துக்கான வார விழாவாக கொண்டாடி வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறையை கையில் எடுத்து கட்சி

நிர்வாகிகள் அவர்களுக்காக தொண்-டாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி, ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளனர்.

அதன்படி தமிழகத்தில் மாநில தலைவர் அண்ணா-மலை இந்த பணியை தொடங்-கிவைத்தார். இன்றைய தினம் தமிழகம் முழுவதும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தேசிய நலவாரிய அட்டை

வழங்கு-கிற நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சையில் ஆயிரக்கணக்-கானவர்களுக்கு  வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் நடைபாதை வணிகர்களுக்கு ஏற்கனவே எஸ்.எம்.எஸ். மூலம் வங்கிக்கு கோரிக்கை

விடுத்தால் ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட சிறு குறு நடுத்தர வியாபாரிகளுக்கு கூடுதல் கடன் வழங்கப்பட்டது. அமைப்பு சாரா தொழிலா-ளர்களுக்கு தலா

500 வீதம் மூன்று மாதங்களுக்கு வழங்கப்பட்டது. ஜன்தன் யோஜனா திட்டத்தில் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு ரூ.500 வழங்கப்பட்டது. இருமொழிக் கொள்கை என்பது தமிழக மக்களை

ஏமாற்றுகின்ற கொள்கை. கணியன் பூங்குன்றனார் கூறியபடி யாரும் ஊரே யாவரும் கேளிர் என்ற அடிப்படையில் அனைவரும் அனைத்து நாட்டுக்கும் போகலாம். உலகமே நமக்கு ஒன்றுதான் என்றார்.

மகாகவி பாரதியார் தமிழ் மொழியை அளவுக்கதிகமாக போற்றிப் புகழ்ந்துள்ளார். அவருக்கு 14 மொழிகள் தெரியும். எந்த மொழியையும் வாழ்க என்று தான் கூறவேண்டும். ஒழிக என்று கூறக்கூடாது

என பாரதியார் கூறியுள்ளார்.இருமொழிக் கொள்கை என்பது தி.மு.க. வாடிக்கையாக அரசியலுக்கு பயன்படுத்தக்கூடிய ஒரு வாசகம். தற்போது கச்சத்தீவை மீட்போம் என்று அறிக்கை விடுத்து

வருகிறார். இதற்கு முன்னர் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், மாநிலத்தில் தி.மு.க ஆட்சியும் இருந்தபோது தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது.தமிழகத்தில் உள்ள 22 ஆயிரம் மெட்ரிக் பள்ளியில்

இந்தி மொழி கற்பிக்க படுகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு இணைப்பு மொழி இந்தி மொழி என்று தான் வந்துள்ளது. ஆங்கிலம் என்று வரவில்லை. அதன்படிதான் மத்திய அமைச்சர் அமித்ஷா இந்தி

மொழி குறித்து பேசி வருகிறார். தமிழகத்தில் இந்தித் திணிப்பு கிடையாது. ஆளுநர் தேநீர் விருந்தை தி.மு.க புறக்க-ணித்தது குறித்து ஏற்கனவே பா.ஜ.க மாநிலத் தலைவர் தக்க பதிலடி கொடுத்து விட்டார்.
 
பேட்டியின் போது தஞ்சை மாவட்ட தலைவர் பண்ணவயல் இளங்கோ, மாவட்ட பொதுச் செயலா-ளரும் கவுன்சிலருமான ஜெய்சதீஷ், தேசிய பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ். ராமலிங்கம், மாநகர

செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News