செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கால்வாய்களை தூர்வாருவதை நேரில் ஆய்வு செய்த மு.க.ஸ்டாலின்

Published On 2021-09-25 07:53 GMT   |   Update On 2021-09-25 12:25 GMT
மழைக்காலத்தில் தண்ணீர் ரோடுகளில் தேங்காமல் வடிந்து செல்லும்படி பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
சென்னை:

வடகிழக்கு பருவமழையின் போது சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்குவது வழக்கம்.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந்தேதிக்கு பிறகு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி சார்பில் 4,254 இடங்களில் மழை நீர் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் இன்று காலையில்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கால்வாய்கள் தூர்வாருவதை நேரில் சென்று பார்வையிட்டார்.

கோட்டூர்புரம் காந்தி மண்டபம் ரோட்டில் மழை நீர் கால்வாய் தூர்வாருவதை பார்த்தார்.


பின்னர் அங்கிருந்து மத்திய கைலாஷ் பகுதிக்கு சென்று தெற்கு பக்கிங்காம் கால்வாய் தூர்வாருவது, இந்திரா நகர் பறக்கும் ரெயில் நிலையம் அருகில் ரோபோட்டிக் எந்திரம் மூலம் பக்கிங்காம் கால்வாய் தூர்வாருவது, திருவான்மியூர் பாலம் அருகில் தூர்வாருதல், வேளச்சேரி ஏரியில் ஆகாய தாமரைகளை அகற்றுதல், மேக்ரோ டிரைன் கட்டுமானம், வேளச்சேரி 60 அடி உள்வட்ட சாலையில் வீராங்கல் ஓடையில் தூர்வாருதல் மற்றும் நாராயணபுரம் ஏரி, பள்ளிக்கரணை ஆகிய 9 இடங்களில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, அனைத்து பணிகளையும் வருகிற 10-ந்தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும். மழைக்காலத்தில் தண்ணீர் ரோடுகளில் தேங்காமல் வடிந்து செல்லும்படி பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது தலைமை செயலாளர் இறையன்பு, அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News