செய்திகள்
லாரி சென்டர் மீடியனில் மோதியவாறு நின்ற காட்சி.

கடத்தூர் அருகே சென்டர் மீடியனில் லாரி மோதி விபத்து

Published On 2020-01-09 14:42 GMT   |   Update On 2020-01-09 14:42 GMT
கடத்தூர் அருகே இன்று அதிகாலை சென்டர் மீடியனில் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கடத்தூர்:

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ளது கல்லாறு பாலம். இந்த பாலத்தின் வழியாக கடத்தூரில் இருந்து பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, சேலம் ஆகிய முக்கிய பகுதிகளுக்கு நாள்தோறும் பல நூற்றுக்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் இன்று அதிகாலை சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.

ஐதராபாத்தில் இருந்து சேலத்திற்கு போட்டிப்பூ ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. லாரியை பாபு என்னும் டிரைவர் ஓட்டி வந்தார். லாரியனாது இன்று அதிகாலை தருமபுரி மாவட்டம் கடத்தூர் பகுதி கல்லாறு பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது, நடுவில் அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியன் மீது எதிர்பாராத விதமான மோதியது. இந்த விபத்தில் லாரி டிரைவர் பாபு எந்தவித காயமும் இன்றி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனை அறிந்த அவ்வழியாக சென்றவர்கள் மற்றும் பொதுமக்கள் கூடிநிற்று பார்த்தனர். சம்பவ நேரத்தில் அப்பகுதியில் மிகுதியான வாகனங்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,

பாலத்தின் மத்தியில் உள்ள தடுப்பு சுவரில் வாகனங்கள் அடிக்கடி மோதி விபத்துக்குள்ளாகிறது. பாலத்தின் இருபுறங்களிலும் வேகத்தடைகள் இல்லாததே இதற்கு காரணம். மேலும், இப்பகுதியில் உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்த நிலையிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர் என்றனர்.
Tags:    

Similar News