அழகுக் குறிப்புகள்
பேன் தொல்லை

பேன் தொல்லையா? அப்ப இத செய்யுங்க...

Published On 2022-03-30 03:32 GMT   |   Update On 2022-03-30 03:32 GMT
பேன்கள் நமது உச்சந்தலையில் எரிச்சலையும் நமைச்சலையும் ஏற்படுத்துகிறது. இரவுநேரங்களில் தூக்கமின்மைக்கு பேன்கள் கூட ஒரு காரணமாக இருக்க முடியும்.
பேன்கள் தலை, முடி, முதுகு மற்றும் கழுத்து மீது ஊர்ந்து, நமது ரத்தத்தை உறிஞ்சுகின்றன. பேன்களின் முட்டைகள் நிட்ஸ் என்று அழைக்கப்படுகின்றன, இது முடியுடன் ஒட்டிக்கொள்கிறது, மேலும் இது அரிப்பை ஏற்படுத்துகிறது.

ஒருவரின் தலை தொடர்பிலிருந்து மற்றொருவருக்கு பேன்கள் உருவாகின்றன. பேனால் குதிக்கவோ அல்லது பறக்கவோ முடியாது. ஆனால் முடியின் வழியாக பேன் மற்றொருவருக்கு பரவுகிறது. பேன்கள் கருப்பு, பழுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். தலையில் பேன் என்பது கெட்ட மற்றும் சுகாதாரமின்மை பிரச்சினை அல்ல.

பேன்கள் நமது உச்சந்தலையில் எரிச்சலையும் நமைச்சலையும் ஏற்படுத்துகிறது. பேன் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட ஒருவர், தலையை அடிக்கடி சொறிந்து கொண்டிருப்பார். பேன் இரவில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும். மேலும் இரவுநேரங்களில் தூக்கமின்மைக்கு பேன்கள் கூட ஒரு காரணமாக இருக்க முடியும்.

3 வகை பேன்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. சீப்புகள், கேப்ஸ், தூரிகைகள் போன்ற கூந்தல் பராமரிப்பு பொருட்களை வெந்நீரில் ஊற வைத்து கழுவவும், வாரத்திற்கு ஒரு முறையாவது இவ்வாறு சுத்தம் செய்வதை வழக்கமாக்கி கொள்ளவும்.

சீப்புகள், முடி தூரிகை போன்ற பொருட்களை பகிர்ந்து கொள்வதை நிறுத்துங்கள். முடிந்தவரை அடிக்கடி உங்கள் படுக்கை விரிப்புகளை மாற்றவும். உங்கள் துணிகளை வெந்நீரில் ஊற வைத்து கழுவவும், இதனால் பேன்களை அகற்றி, பேன்கள் பரவுவதை தடுக்க முடியும்.

தலை மற்றும் முடிக்கு வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை தடவவும். தேங்காய் எண்ணெயில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது பேன்களை அழிக்க உதவும்.
Tags:    

Similar News