செய்திகள்
கோப்புபடம்

தேசிய தரவரிசை மதிப்பீட்டு பட்டியலில் உடுமலை அரசு கல்லூரி தேர்வு

Published On 2021-09-11 07:46 GMT   |   Update On 2021-09-11 07:46 GMT
தேசிய அளவிலான கலை, அறிவியல் கல்லூரிகளில், உடுமலை அரசுக்கல்லூரி 98ம் இடம் பெற்றுள்ளது.
உடுமலை;
 
மத்திய கல்வி அமைச்சகம், 2021-ம் ஆண்டுக்கான, கல்வி நிறுவனங்களை தரவரிசைப்படுத்துவதற்காக நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களை ஆய்வு செய்து தேசிய தரவரிசை மதிப்பீட்டு பட்டியலை வெளியிட்டுள்ளது.

கற்றல் கற்பித்தலில் மாணவர் சேர்க்கை, உள்கட்டமைப்பு, ஆராய்ச்சி, சிறந்த நடைமுறைகள், அக மற்றும் புற கல்வி சார் முன்னெடுப்பு, ஆசிரியர் - மாணவர் விகிதம், பேராசிரியர்களின் பணி அனுபவம், பேராசிரியர்களின் ஆய்வுப் பணிகள், ஆய்வுக்கட்டுரைகள் வெளியீடு, நூலாக்கம், மாணவர் தேர்ச்சி விகிதம், மாணவர்களின் சமூக பொருளாதார பின்புலம், மாற்றுத்திறனாளி மாணவர் சேர்க்கை, போட்டி சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவிலான கலை, அறிவியல் கல்லூரிகளில், உடுமலை அரசுக்கல்லூரி 98ம் இடம் பெற்றுள்ளது. அகில இந்திய கல்லூரிகளில், 100 இடம் பெற்ற கல்லூரிகளில், இக்கல்லூரி மட்டுமே கிராமப்புற கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகவலை கல்லூரி முதல்வர் கல்யாணி தெரிவித்தார்.
Tags:    

Similar News