செய்திகள்
இரவு நேர ஊரடங்கு

கர்நாடகாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது

Published On 2021-04-20 19:40 GMT   |   Update On 2021-04-20 19:55 GMT
கர்நாடகாவில் இன்று இரவு 9 மணி முதல் மே 4ம் தேதி காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் 11.8 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து சென்றுள்ளனர். 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தி கொண்ட முதல் மந்திரி எடியூரப்பா தலைமையிலான ஆலோசனை கூட்டத்தின் முடிவில் இரவு ஊரடங்கு பற்றிய முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில், கர்நாடகாவில் புதன் (இன்று) இரவு 9 மணி முதல் மே 4-ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

அத்தியாவசிய சேவைகள் தவிர பிற கடைகள், வணிக வளாகங்கள் அனைத்தும் இன்று இரவு 9 மணிக்கு மூடப்பட வேண்டும்.

அனைத்து கல்வி நிறுவனங்கள், உடற்பயிற்சி கூடங்கள், ஸ்பாக்கள் ஆகியவை தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.  
விளையாட்டு வீரர்களுக்காக, பயிற்சி செய்வதற்கான நோக்கங்களுக்காக நீச்சல் குளங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
Tags:    

Similar News