செய்திகள்
பாலஸ்தீன ஆதரவாளர்கள்

நியூயார்க் சதுக்கத்தில் இஸ்ரேல்- பாலஸ்தீன ஆதரவாளர்கள் கடும் மோதல்

Published On 2021-05-21 07:07 GMT   |   Update On 2021-05-21 07:07 GMT
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நியூயார்க்:

இஸ்ரேலுக்கும் காசா முனையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்புக்கும் இடையில் நடந்த உக்கிரமான போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். காசா முனையில் இந்த போர் நிறுத்தத்தை கொண்டாடிவருகின்றனர்.

இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டபிறகு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்ரேல் ஆதரவாளர்களுக்கும், பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. 

டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த இந்த மோதலின்போது, பட்டாசுகளை கொளுத்தி வீசி தாக்கினர். இதில் சிலர் காயமடைந்தனர். இதையடுத்து போலீசார் சண்டையை தடுத்து நிறுத்தினர். வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



கடந்த வாரம் இஸ்ரேல்-ஹமாஸ் சண்டை உச்சத்தில் இருந்தபோது பாலஸ்தீன ஆதரவாளர்கள் அமெரிக்காவின் நகரங்களில் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News