செய்திகள்
ஆசிரியர்கள் வளர்த்த மரங்களை படத்தில் காணலாம்.

ஆசிரியர்கள் வளர்த்த மரங்களால் பசுமையாக காட்சியளிக்கும் அரசு பள்ளி

Published On 2021-09-06 08:18 GMT   |   Update On 2021-09-06 08:18 GMT
மரத்தின் நிழலில் மாணவர்களை அமர்த்தி பாடம் நடத்த வசதியாக இருக்கிறது.
அவினாசி:

அவிநாசி கைகாட்டிபுதூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முகப்பில் உள்ள விசாலமான இடத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் மரக்கன்றுகளை நட்டு ஆசிரியர்கள், பராமரிக்க தொடங்கினர். தற்போது அவை வளர்ந்து பசுமையை பரப்பி கொண்டிருக்கிறது. 

இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் ஆனந்தன் கூறுகையில்:

வேம்பு, புங்கன் என பலவகை மண்ணுக்கேற்ற மரங்கள் இங்குள்ளன. மரத்தின் நிழலில் மாணவர்களை அமர்த்தி பாடம் நடத்த வசதியாக இருக்கிறது. மாணவர்களும் மதிய நேரத்தில் மரத்தின் நிழலில் அமர்ந்து மதிய உணவு உண்கின்றனர். 

இயற்கையின் அனுபவத்தையும் மாணவர்கள் உணர்ந்து கொள்கின்றனர். இதுவும் அவர்களுக்கு ஒரு பாடம் தான். மரங்களின் நிழலில் சிமென்ட் அல்லது மர இருக்கை வசதியை ஏற்படுத்த சில தன்னார்வ அமைப்பினரின் பங்களிப்பை கேட்டுள்ளோம் என்றார்.
Tags:    

Similar News