ஆன்மிகம்
சேலம் சுகவனேசுவரர் கோவில்

சேலம் சுகவனேசுவரர் கோவிலில் மகாளய அமாவாசை அன்று தர்ப்பண நிகழ்ச்சி ரத்து

Published On 2020-09-12 09:29 GMT   |   Update On 2020-09-12 09:29 GMT
சுகவனேசுவரர் கோவிலில் வருகிற 17-ந் தேதி மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சேலம் சுகவனேசுவரர் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகமாக உள்ளதால், சேலம் சுகவனேசுவரர் கோவிலில் வருகிற 15-ந் தேதி நடைபெற உள்ள பிரதோஷ வழிபாட்டில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படுகிறது. மேலும் பூஜைகள், அபிஷேகங்கள் முடிந்த பின்னர் சாமி தரிசனத்துக்கு மட்டும் உரிய வழிமுறைகளின்படி பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இதே போல வருகிற 17-ந் தேதி மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்படுகிறது. அன்றைய தினம் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News