செய்திகள்
கோப்புபடம்.

4 வழிச்சாலைக்காக உடுமலையில் பாலம் கட்டுமான பணிகள் தீவிரம்

Published On 2021-11-23 06:54 GMT   |   Update On 2021-11-23 06:54 GMT
தொடர் மழையால் பணியிடத்தில் மழை நீர் தேங்கி பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது.
உடுமலை:

மத்திய அரசின் ‘பாரத் மாலா பிரயோஜனா’ திட்டத்தில் பொள்ளாச்சி-திண்டுக்கல் வரையிலான நான்கு வழிச்சாலை திட்டம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தில் பொள்ளாச்சி-திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வரையிலான 50.07 கி.மீ., தொலைவுக்கு திட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளது. 

திட்டத்தின் கீழ் மழை நீர் ஓடைகளின் குறுக்கே 46 சிறு பாலங்கள், 490 மிகச்சிறு பாலங்கள் அமைக்கப்படுகின்றன. அவ்வகையில் உடுமலை - செஞ்சேரிமலை ரோட்டில் ஏரிப்பாளையம் ராஜவாய்க்கால் பள்ளம் பகுதியில் பாலம் கட்டுமான பணிகள் நடந்து வந்தது. தொடர் மழையால் பணியிடத்தில்  மழை நீர் தேங்கி  பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. 

பின்னர் தேங்கியிருந்த மழை நீர் வெளியேற்றப்பட்டு பணிகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதேபோல் உடுமலை-பல்லடம் மாநில நெடுஞ்சாலையில் சின்னவீரம்பட்டி அருகே பாலம் கட்டுமான பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. புறநகர் பகுதியில் ஓடுதளம் அமைக்கப்பட்ட இடங்களில் தார் ஊற்றி சாலை மேம்படுத்தப்பட்டு வருகிறது. திட்ட சாலைகளுக்கான அணுகுசாலைகளில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடக்கிறது. 
Tags:    

Similar News