ஆட்டோமொபைல்

ஹோன்டா இ எலெக்ட்ரிக் வாகன விவரங்கள் வெளியீடு

Published On 2019-06-16 10:02 GMT   |   Update On 2019-06-16 10:02 GMT
ஹோன்டா நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எலெக்ட்ரிக் வாகனத்தின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



ஹோன்டா நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எலெக்ட்ரிக் வாகனத்தின் விவரங்கள் வெளியாகியுள்ளது. ஹோன்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார் பிரத்யேக இ.வி. பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கிறது. ஹோன்டா இ பிளாட்ஃபார்ம் நகர சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்படுகிறது.

இதன் பேட்டரி கீழ் பகுதியில் கார் வீல் பேசின் மத்தியில் பொருத்தப்படுகிறது. இதனால் எடை 50:50 சதவிகிதமாக இருக்கும். இதன் மூலம் காரை கட்டுப்படுத்துவது எளிமையாக இருக்கும். காருக்கான செயல்திறன் எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் காரின் பின்புற சக்கரங்கள் வழியாக வழங்கப்படுகிறது.

இந்த காரின் 4-வீல் இன்டிபென்டன்ட் சஸ்பென்ஷன் அமைப்பு அனைத்து வித சூழ்நிலைகளிலும் சிறப்பான ஸ்டேபிலிட்டியை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காரின் எடையை குறைத்து, செயல்திறன் மற்றும் பயண தூரம் உள்ளிட்டவற்றை சிறப்பாக பெறும் நோக்கில் சஸ்பென்ஷன் பாகங்கள் ஃபோர்ஜ்டு அலுமினியம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.



ஹோன்டா இ காரின் காம்பேக்ட் வடிவமைப்பு மூலம் அதிக போக்குவரத்து நெரிசல் மிக்க நகர சாலைகளிலும் சுலபமாக பயணிக்க முடியும். ஹோன்டா இ காரில் 35.5 KWh லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்படுகிறது. இதனை டைப் 2 ஏ.சி. கனெக்‌ஷன் அல்லது சி.சி.எஸ்.2 டி.சி. ரேபிட் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்ய முடியும்.

இந்த பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 200 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். மேலும் இதில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இது பேட்டரியை வெறும் 30 நிமிடங்களில் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்துவிடும். ஹோன்டாவின் சார்ஜிங் போர்ட் காரின் பொனெட்டில் இணைக்கப்பட்டுள்ளது.

சார்ஜிங் நிலையை உணர்த்த எல்.இ.டி. லைட்டிங் கண்ணாடி பேனலில் தெரியும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. சார்ஜிங் போர்ட்டினை மிக எளிமையாக இயக்கும் வகையில் காரின் முன்புறம் வழங்கப்பட்டுள்ளது. காரின் உள்புறம் இருக்கும் டூயல் தொடுதிரை ஸ்கிரீன்களில் பேட்டரி நிலையை காண்பிக்கிறது.
Tags:    

Similar News