உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பல்லடம் அருகே விவசாயிகளுக்கு மண் வளம் குறித்த பயிற்சி - 5ந்தேதி நடக்கிறது

Published On 2021-12-02 08:50 GMT   |   Update On 2021-12-02 08:50 GMT
திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மட்டும் கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் விவசாயிகளுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.
பல்லடம்:

பல்லடம் அருகே வேளாண்மை நிலையத்தில் மண் மாதிரி, மண் பரிசோதனை பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. 

இதுகுறித்து பொங்கலூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜலிங்கம் கூறியதாவது:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக மண் தினத்தை முன்னிட்டு மண் மாதிரி சேகரித்தல், மண் பரிசோதனை மற்றும் மண் வள மேம்பாடு குறித்த நிலைய பயிற்சி வருகிற 5-ந்தேதி நடைபெறுகிறது. 

இதில் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மட்டும் கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் விவசாயிகளுக்கு கட்டணம் எதுவும் கிடையாது. மேலும் பயிற்சியில் கலந்து கொள்ளும் விவசாயிகளுக்கு இலவசமாக மண் பரிசோதனை செய்து மண் வள அட்டை வழங்கப்படும்.

எனவே பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் இருந்து மண் மாதிரி சேகரித்து கொண்டு ஆதார் அட்டையுடன் இணைத்து கொண்டுவர வேண்டும். எனவே திருப்பூர் மாவட்ட விவசாயிகள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News