இந்தியா
சோனியா காந்தி

உத்தர பிரதேச தேர்தல் - சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல், பிரியங்கா பிரசாரம்

Published On 2022-01-24 14:04 GMT   |   Update On 2022-01-24 14:04 GMT
உத்தர பிரதேச மாநிலத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் கட்சி வேட்பாளர், அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜனதா கூட்டணியில் இணைந்துள்ளார்.
லக்னோ:

உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

இங்கு பா.ஜ.க., சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒவ்வொரு கட்டமாக வேட்பாளர் பட்டியலை அறிவித்து பிரசாரத்தையும் தொடங்கிவிட்டன.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 2 பேர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜக மற்றும் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் முதல்கட்ட தேர்தல் பிரசாரத்துக்காக 30 பேர் கொண்ட பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் இந்தப் பட்டியலில் அடங்குவார்கள். 

Tags:    

Similar News