ஆட்டோமொபைல்
நார்டன் மோட்டார்சைக்கிள்

ஆறு புதிய பெயர்களுக்கு டிரேட்மார்க் கோரும் நார்டன் மோட்டார்சைக்கிள்

Published On 2020-10-30 08:22 GMT   |   Update On 2020-10-30 08:22 GMT
நார்டன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஆறு புதிய பெயர்களுக்கான டிரேட்மார்க் வழங்க விண்ணப்பித்து இருக்கிறது.



நார்டன் மோட்டார்சைக்கிள் ஆறு புதிய பெயர்களை பயன்படுத்த டிரேட்மார்க் கோரி விண்ணப்பித்து இருக்கிறது. டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் நார்டன் மோட்டார்சைக்கிளை கைப்பற்றிய பின் நிகழ்ந்திருக்கும் பெரும் திட்டமாக இது பார்க்கப்படுகிறது.

நார்டன் எலெக்ட்ரா, நார்டன் பாஸ்ட்பேக், நார்டன் நேவிகேட்டர், நார்டன் நாமண்ட், நார்டன் ரேஞ்சர் மற்றும் நார்டன் காம்பேட் என ஆறு பெயர்களுக்கான டிரேட்மார்க் வழங்க நார்டன் மோட்டார்சைக்கிள் விண்ணப்பித்து இருக்கிறது. 



அடுத்த சில ஆண்டுகளில் நார்டன் மோட்டார்சைக்கிள் வெளியிட இருக்கும் புதிய வாகனங்களுக்கு இந்த பெயர்கள் சூட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டிரேட்மார்க் விண்ணப்பத்தில் உள்ள சில பெயர்கள் 60 மற்றும் 70களின் காலக்கட்டத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. அந்த வகையில் நார்டன் மோட்டார்சைக்கிள் பழைய பெயர்களை பயன்படுத்தி விற்பனை மற்றும் லாபத்தை  ஈட்ட முயற்சிக்கலாம் என தெரிகிறது. 
Tags:    

Similar News