உள்ளூர் செய்திகள்
சிறுகடம்பூர் கிராமத்தில் தை பூசத்தை முன்னிட்டு பால்குடம் எடுத்து வரும் பக்தர்கள்.

சுப்பிரமணியர் கோவிலில் பால்குட திருவிழா

Published On 2022-01-19 10:22 GMT   |   Update On 2022-01-19 10:22 GMT
செந்துறை பகுதிகளில் தைப்பூசத்தையொட்டி முருகன் கோயில்களில் பால் காவடி எடுத்தல், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள சிறுகடம்பூர் கிராமத்தில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில், மூன்றாவது ஆண்டாக பால்குட திருவிழா நடைபெற்றது.

பால்குடம் திருவிழாவை முன்னிட்டு, ஐம்பதுக்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி சுப்ரமணியர் செல்லியம்மன் கோவில் அருகிலுள்ள ஏரியிலிருந்து பால்குடம், காவடி எடுத்தனர்.

அவர்கள் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க நடனமாடியபடி ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியருக்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலைக்கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் பல்வேறு மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல் செந்துறை பகுதியிலுள்ள உஞ்சினி, நல்லாம்பாளையம், செந்துறை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் முருகன் கோவில்களில் சுவாமிகளுக்கு பால், தயிர், தேன் உட்பட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Tags:    

Similar News