செய்திகள்
எடியூரப்பா

எங்கள் கட்சிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி: எடியூரப்பா

Published On 2020-11-11 03:33 GMT   |   Update On 2020-11-11 03:33 GMT
இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று இருப்பதன் மூலம் மாநில அரசின் செயல்பாடுகளுக்கு மக்கள் ஆதரவு வழங்கியுள்ளனர் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு :

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா பெற்றது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

இடைத்தேர்தல் நடைபெற்ற ஆர்.ஆர்.நகர், சிரா ஆகிய 2 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. எங்கள் கட்சிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த வெற்றி மக்களை சேர்ந்தது. இந்த வெற்றி மூலம் மக்கள் மாநில அரசின் செயல்பாடுகளுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். கடந்த ஒரு ஆண்டில் வெள்ளம் ஏற்பட்டு பாதிப்புகள் உண்டானது. கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவி பெரிய சவால்களை சந்தித்தோம். இந்த நேரத்தில் மக்களின் கஷ்டங்களை தீர்க்க மாநில அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டது.

தேர்தல் பிரசாரத்தின்போது, 2 தொகுதிகளில் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றுவோம். இன்னும் உள்ள ஆட்சி காலத்தில் நாங்கள் ஏற்கனவே மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். பீகாரில் பா.ஜனதா கூட்டணிக்கு நாங்கள் எதிர்பாராத வெற்றி கிடைத்துள்ளது. பிரதமர் மோடி, நிதிஷ்குமார் ஆகியோரின் உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது. மோடி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதற்கு இது எடுத்துக் காட்டு ஆகும்.

இதற்காக பிரதமர் மோடி, எங்கள் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது எதிர்க்கட்சி தலைவர்கள் எங்கள் ஆட்சியை பற்றி விமர்சனம் செய்தனர். அவர்களுக்கு மக்கள் தக்க பதில் அளித்துள்ளனர்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Tags:    

Similar News