ஆன்மிகம்
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட போது எடுத்த படம்

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது

Published On 2019-09-17 04:13 GMT   |   Update On 2019-09-17 04:13 GMT
புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடையை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி வாசு தேவன் நம்பூதிரி திறந்து வைத்தார்.
ஓணம் பண்டிகைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 9- ந் தேதி திறக்கப்பட்டது. 11- ந்தேதி திருவோண தினத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் கோவில் நடை 13- ந்தேதி இரவு அடைக்கப்பட்டது.

இதையடுத்து புரட்டாசி மாத பூஜைக்காக கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி வாசு தேவன் நம்பூதிரி மாலை 5 மணிக்கு நடையை திறந்து வைத்தார். இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம், உஷ பூஜை, மாலை 6 மணிக்கு தீபாராதனை, புஷ்பாபிஷேகம் போன்றவை நடைபெறும். 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின் 21- ந் தேதி இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
Tags:    

Similar News