ஆட்டோமொபைல்

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு ரூ.500 கோடி அபராதம் விதித்த பசுமை தீர்ப்பாயம்

Published On 2019-03-07 09:25 GMT   |   Update On 2019-03-07 09:25 GMT
தேசிய பசுமை தீர்ப்பாயம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு ரூ.500 கோடி அபராதம் விதித்திருக்கிறது. #Volkswagen



இந்தியாவில் டீசல் கார்களில் சுற்றுச்சூழலை பாதிக்கும் தன்மை கொண்ட ஏமாற்று உபகரணத்தை பொருத்தியதால் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்து தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.500 கோடி அபராதம் விதித்துள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அபராத தொகையை இரண்டு மாதங்களுக்குள் செலதுத்த வேண்டும் என உத்தரவிட்டார். 

ஃபோக்ஸ்வேகன் டீசல் கார்களில் பயன்படுத்தப்பட்ட உபகரணம் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது என நவம்பர் 16, 2018 இல் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ரூ.100 கோடி ரூபாயை மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு செலுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.



டெல்லியில் அதிகப்படியான நைட்ரஜன் ஆக்சைடை காற்றில் கலக்க விட்டதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ரூ.171.34 கோடியை அபராதமாக செலுத்த மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம், பெரு நிறுவனங்களுக்கான அமைச்சகம், ஆட்டோமோடிவ் ஆய்வுக்கான இந்திய கூட்டமைப்பு மற்றும் தேசிய பசுமை பொறியியல் ஆய்வு அமைப்பு உள்ளிட்டவற்றை சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழு பரிந்துரைத்தது. 

எமிஷன் விதிகளை மீறிய விவகாரத்தில் ஃபோக்ஸ்வேகன் நிறுவன வாகனங்களின் இந்திய விற்பனைக்கு தடை கோரி பசுமை தீர்ப்பாயத்தில் பலர் மனு அளித்திருந்தனர். இவற்றை விசாரித்த பின் பசுமை தீர்ப்பாயம் அபராதம் விதித்துள்ளது.
Tags:    

Similar News