ஆன்மிகம்
நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில்

நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோவிலில் மாசி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது

Published On 2021-02-15 08:22 GMT   |   Update On 2021-02-15 08:22 GMT
நாகர்கோவில் கோட்டார் வடிவீஸ்வரத்தில் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மாசி பெருந்திருவிழா நாளை மறுநாள் (புதன்கிழமை) தொடங்குகிறது.
நாகர்கோவில் கோட்டார் வடிவீஸ்வரத்தில் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மாசி பெருந்திருவிழா நாளை மறுநாள் (புதன்கிழமை) தொடங்குகிறது.

முதல்நாளில் அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 9 மணிக்கு திருவிழா கொடியேற்றம், மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 9 மணிக்கு சாமியும் அம்மனும் புஷ்பக வாகனத்தில் பவனி வருதல் ஆகியவை நடைபெறும். 2-ம் நாள் திருவிழாவில் காலை 7 மணிக்கு சாமியும் அம்மனும் புஷ்பக விமானத்தில் பவனி வருதல், மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு நகைச்சுவை பட்டிமன்றம் போன்றவை நடக்கிறது.


தொடர்ந்து வரும் விழா நாட்களில் சிறப்பு அபிஷேகம், வாகன பவனி, சமய சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் போன்றவை நடக்கின்றன.

24-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரர் பவனி வருதல், மதியம் 12 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 4 மணிக்கு சுப்பிரமணியசாமி வெள்ளி குதிரை வாகனத்தில் வேட்டைக்கு எழுந்தருளல், இரவு 9 மணிக்கு சாமி அம்மனும் புஷ்பக வாகனத்தில் பவனி வருதல் நடைபெறும்.

25-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு சுப்பிரமணியசாமி வெள்ளிக்குதிரை வாகனத்தில் வலம் வருதல், காலை 7.45 மணிக்கு தேரோட்டம், இரவு 7 மணிக்கு பரதநாட்டியம், 10 மணிக்கு சப்தவர்ண நிகழ்ச்சி போன்றவையும், விழாவின் நிறைவு நாளான 26-ந் தேதி மாலை 6 மணிக்கு ஆறாட்டுத்துறைக்கு சாமியும் அம்மனும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளல், சமய சொற்பொழிவு, இரவு 9 மணிக்கு வீதி உலா நிகழ்ச்சி ஆகியவையும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News