செய்திகள்
காட்டு யானை

ஆசனூர் அருகே சாலையில் உலா வரும் காட்டு யானைகள்

Published On 2020-08-26 09:58 GMT   |   Update On 2020-08-26 09:58 GMT
ஆசனூர் அருகே சாலையில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வருவருவதால் வாகன ஒட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆசனூர், தலமலை, தாளவாடி, கேர்மாளம் வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளது. இந்த அடர்ந்த வன பகுதி திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த சாலையில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக உலா வருகிறது. ஆசனூர் அடுத்துள்ள காரபள்ளத்தில் சோதனை சாவடியில் உயர தடுப்பு கம்பி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வழியாக அதிக கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரி டிரைவர்கள் கரும்புகளை தேசிய நெடுஞ்சாலையில் வீசி சென்று விடுகிறார்கள். இதனை உண்ண யானைகள் சாலையில் உலா வருகிறது. எனவே ரோட்டில் கரும்புகளை வீசி செல்லும் லாரி டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மற்ற வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News