செய்திகள்
பொன் ராதாகிருஷ்ணன்

குமரி மாவட்டத்தில் 6 தொகுதிகளையும் பா.ஜனதாவுக்கு கேட்போம்- பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2021-02-11 04:04 GMT   |   Update On 2021-02-11 04:04 GMT
வரும் சட்டசபை தேர்தலில் குமரி மாவட்டத்தில் ஆறு தொகுதிகளையும் கேட்போம் என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
நாகர்கோவில்:

முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் உருவாகியுள்ள அரசியல் சூழ்நிலையை வைத்து பார்க்கும்போது தி.மு.க. ஆட்சிக்கு வரவே முடியாது என நாங்கள் சொல்கிறோம். சில கட்சிகள் மதத்தின் பெயரை சொல்லி ஓட்டு கேட்கிறார்கள் என முதல்-அமைச்சர் கூறியிருப்பது, பா.ஜனதாவை இல்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வைச் சேர்ந்த வேட்பாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டால் நாங்கள் விவசாய நகைக்கடன்களை தள்ளுபடி செய்வோம் என்றார், ஸ்டாலின். ஏன் தள்ளுபடி செய்யவில்லை. அதை முதலில் செய்யட்டும். அ.தி.மு.க. - பா.ஜனதா ஒரே கூட்டணியில் உள்ளது. எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை.

என்னைப் பொறுத்தவரையில் வரும் சட்டசபை தேர்தலில் குமரி மாவட்டத்தில் ஆறு தொகுதிகளையும் கேட்போம். ஏன் இப்படி 6 தொகுதிகளையும் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்கிறார் என்று பா.ஜனதாவும், அ.தி.மு.க.வும் கவலைப்படும். பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு சசிகலா வந்தபோது மிகப்பெரிய எழுச்சியாக இருந்ததை பார்த்தேன். அது அவர்களது கட்சிக்கு பலம் உள்ளதாக இருக்கும். நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம், முதல்வர் வேட்பாளரை அ.தி.மு.க. முடிவு செய்துவிட்டது.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
Tags:    

Similar News