செய்திகள்
கருப்பு பூஞ்சை

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 20 பேருக்கு சிகிச்சை

Published On 2021-06-08 05:36 GMT   |   Update On 2021-06-08 05:36 GMT
நெல்லை மாவட்டத்தில் தற்போது 630 நோயாளிகள் மட்டுமே அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் வசதி உள்ள படுக்கையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் 3,662 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 682 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கடந்த வாரம் நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற ஆக்சிஜன் வசதியுன் கூடிய படுக்கை வசதி கிடைக்காமல் இருந்து வந்தது. ஆனால் தற்போது அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் ஆக்சிஜன் படுக்கை வசதி காலியாக உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் தற்போது 630 நோயாளிகள் மட்டுமே அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் வசதி உள்ள படுக்கையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் புதிதாக பரவி வரும் கருப்பு பூஞ்சை நோய்க்கும் நெல்லை மாவட்ட ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி டீன் ரவிச்சந்திரன் கூறியதாவது:-

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தற்போது கருப்பு பூஞ்சை நோய் தாக்குதலுக்கு உள்ளாகி 20 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு தனி வார்டு ஒதுக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு தேவையான அனைத்து வகை மருந்துகளும் கை இருப்பில் உள்ளன.

கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்ற 4 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நெல்லை மாவட்ட ஆஸ்பத்திரிகளில் இருந்து கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்கள் சர்க்கரை நோயாளிகள் போன்றவர்களுக்கு தலைவலி, கருப்புபூஞ்சை அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அவர்கள் டாக்டரை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News